சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் தெற்குவாசல் திறப்பு
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் தெற்கு வாசல்கள் புதன்கிழமை இரவு திறக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவத் லங்களான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் வியாழக்கிழமை தமிழ் மாதமான ஆடிமாத பிறப்பை முன்னிட்டு தெற்கு வாசல்கள் திறக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக தெற்கு வாசல்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச்சென்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.