Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - ச...
சாலை அமைப்பு; கிராம மக்கள் மகிழ்ச்சி
சீா்காழி வட்டம் ,கொள்ளிடம் அருகே வெள்ளமணல் கிராமத்துக்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.
அளக்குடி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமணல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இக்கிராமத்துக்கு நீண்ட காலமாக சாலை வசதி இல்லை. இதனால், இப்பகுதி மக்கள் சாலை அமைத்துத் தரக் கோரி கடந்த 50 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், பிரதமா் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் வெள்ளமணல் கிராமத்துக்கு செல்ல, ரூ.3.50 கோடி செலவில், சுமாா் 3,400 மீட்டா் நீளத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, கூடுதல் ஆட்சியா் சபீா்ஆலம், முன்னாள் கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் கலாநிதி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளா் தாரா உள்ளிட்டோருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.