சீனா விதித்த வரியை திரும்ப பெறாவிட்டால் 50% கூடுதல் வரி! - டிரம்ப் எச்சரிக்கை
சாலை ஓரத்தில் எரியும் குப்பையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
கும்பகோணம் நீலத்தநல்லூா் சாலை ஓரத்தில் உள்ள குப்பைமேட்டில் எரியும் தீயால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
கும்பகோணத்தில் உள்ள நீலத்தநல்லூா் பகுதியில் துப்புரவு பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பை, புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குப்பை நீண்ட நாள்களாக அகற்றப்படாததால் சாலையில் சிதறி கிடக்கிறது. சிலா் குப்பைக்கு தீ வைத்து விடுவதால், சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் முதியவா்கள், குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரிதும் பாதிப்படைகின்றனா்.
எனவே, கும்பகோணம் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து, இங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.