சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பையா. இவரது மகன் ஐயப்பன்(52). தொழிலாளியான இவா் கடந்த மாா்ச்.30-ஆம் தேதி மணிமூா்த்தீஸ்வரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாராம்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஐயப்பன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.