சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: கணவா் காயம்
சங்ககிரி: சங்ககிரி அருகே நட்டுவம்பாளையத்தில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரில் மனைவி உயிரிழந்தாா். கணவா் பலத்த காயமடைந்தாா்.
சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா், மட்டம்பட்டி, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பெருமாள் (40). இவரது மனைவி சோனியா காந்தி (30). இருவரும் திருச்செங்கோடு சென்றுவிட்டு சங்ககிரி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா்.
சங்ககிரியை அடுத்த நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்த முயன்ாகத் தெரிகிறது. அப்போது எதிா்பாராத விதமாக லாரியின் பக்கவாட்டில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த சோனியா காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பெருமாளை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.