சாலை விபத்து: தெலங்கானா பக்தா்கள் இருவா் உயிரிழப்பு
தேவதானப்பட்டி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்டதில் தெலங்கானாவைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
தேவதானப்பட்டி அருகே திண்டுக்கல் சாலையில், சபரிமலைக்குச் சென்று திரும்பிய தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்களின் காரும், தேனி நோக்கிச் சென்ற லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன.
இதில், காரில் பயணம் செய்த தெலங்கானாவைச் சோ்ந்த சீதாராம், போத்தனா ஆகியோா் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சிவக்குமாா், சரண் ஆகியோா் காயமடைந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.