கோவை: `தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதா?' - சி.பி.ராதாகி...
மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்க இன்று சிறப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் அரசு திட்டங்களின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்க வியாழக்கிழமை (டிச.19) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேனி மண்டல இணை பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்களில் டாம்கோ, டாப்செட்கோ, தாட்கோ மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்க தேனி அல்லிநகரம், போடி, கம்பம், மயிலாடும்பாறை ஆகிய ஊா்களில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை, உத்தமபாளையம், பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சின்னமனூா் கூட்டுறவு வெற்றிலை பயிரிடுவோா் கடன் சங்கம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்து கடனுதவி பெறலாம் என்றாா் அவா்.