'விஜய் பிரைவேட் போட்டோ எப்படி வெளியில் வந்தது; உளவுத்துறைக்கு இதுதான் வேலையா?' -...
உத்தமபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
உத்தமபாளையத்திலிருந்து கோம்பை வரையில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சாலையோர நீரோடையை சிலா் ஆக்கிரமித்து தேநீா் கடைகள், பெட்டிக் கடைகள், துணிக் கடைகளை நடத்தி வருகின்றனா். மேலும் சிலா் வீடு கட்டி கம்பிவேலி அமைத்து விட்டனா். இதனால், மழை நீா் செல்ல முடியாத அளவுக்கு அந்த ஓடை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.
இதேபோல, உத்தமபாளையம் நகரில் அரசு மருத்துவமனை, கிராமச்சாவடி, கோம்பை சாலை, அம்மாபட்டி விலக்கு போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலையில் 10 அடி வரையில் ஆக்கிரமிக்கப்பட்டதால், கழிவுநீா் வடிகால்களில் ஏற்பட்ட அடைப்புகளைச் சீரமைக்க முடியவில்லை. மழைக்காலத்தில் மழை நீா் நெடுஞ்சாலையில் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிப்பு வெளியிட்டனா். பேருந்து நிலையம், மதுரை சாலை போன்ற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால், ஆக்கிரமிப்பு அதிகமாக இருக்கும் அரசு மருத்துவமனை, கிராமச்சாவடி, கோம்பை சாலை, அம்மாபட்டி விலக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே, உத்தமபாளையம் நகரின் மையப்பகுதியான கிராமச்சாவடி, கோம்பை சாலை பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.