செய்திகள் :

சிட்னி டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா? பாட் கம்மின்ஸ் பதில்!

post image

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பந்துவீசுவதற்கு சிரமப்படுவதை பார்க்க முடிந்தது. இதனால், ஆட்டத்தின் கடைசி நாளில் அவர் பந்துவீசுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், தான் முழு உடல்தகுதியுடன் இருக்கிறேன் எனவும், ஆஸ்திரேலிய அணிக்காக கடைசி நாளில் 20 ஓவர்கள் வீசவும் தயாராக இருக்கிறேன் எனவும் ஸ்டார்க் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வினை முந்திய நாதன் லயன்!

ஆட்டத்தின் கடைசி நாளில் மிட்செல் ஸ்டார்க் 16 ஓவர்களை வீசினார். இரண்டாவது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க், விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்தினார். இருப்பினும், அவர் பந்துவீச்சில் சிரமத்தை சந்தித்ததைப் பார்க்க முடிந்தது.

சிட்னி டெஸ்ட்டில் விளையாடுவாரா?

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இறுதி நாள்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச சிரமப்பட்ட நிலையில், அவர் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிட்செல் ஸ்டார்க் ஒரு போராளி. அவர் வலியுடன் பந்துவீசினார். இருப்பினும், அவரது பந்துவீச்சு வேகம் குறையவில்லை. அணிக்காக பந்துவீச அவர் ஒருபோதும் தயங்கியதில்லை. அவருக்கு வலி இருக்கிறது. ஆனால், வலி இருப்பதைத் தவிர போட்டியில் விளையாடுவதற்கான முழு உடல்தகுதியுடன் அவர் இருக்கிறார் என்றார்.

இதையும் படிக்க:டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

இதுமாதிரி அடி வாங்கியதில்லை..! ரிஷப் பந்த் பேட்டி!

சிட்னி பிட்ச் சரியாக இல்லாத்தால் தன்னால் எப்போதிருந்து அதிரடியாக ஆட வேண்டுமென முடிவெடுக்க முடியவில்லை என இந்திய வீரர் ரிஷப் பந்து கூறியுள்ளார்.சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இ... மேலும் பார்க்க

பிஜிடி தொடரில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிஜிடி தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த ஆஸ்திரேலியராக புதிய சாதனை படைத்துள்ளார். சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச்சுகளை பிடி... மேலும் பார்க்க

பும்ரா - கான்ஸ்டாஸ் மோதல்..! இந்திய வீரர்கள் ஆக்ரோஷமான கொண்டாட்டம்!

ஆஸி. வீரர் கான்ஸ்டாஸுடன் இந்திய கேப்டன் பும்ரா கோபமாக பேசிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்திய அணியில் ரோஹித் சர்மா விலகியதால் பும்ரா அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தா... மேலும் பார்க்க

சிட்னி டெஸ்ட்: முதல்நாள் முடிவில் ஆஸி. ஒரு விக்கெட் இழப்பு!

சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ரோஹித் விலகியதால் பும்ரா அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர்வ... மேலும் பார்க்க

சிட்னி டெஸ்ட்: இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்!

சிட்னி டெஸ்ட்டில் விளையாடி வரும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 72.2 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் ரோஹித் விலகியதால் பும்ரா அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற பும்ரா பேட்டிங்கை தேர... மேலும் பார்க்க

கோமாளி கோலி: மீண்டும் அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழப்பு!

விராட் கோலி மீண்டும் ஒருமுறை அவுட் சைட் ஆஃப் பந்தில் ஆட்டமிழந்து சொத்தப்பினார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, பும்ரா அணியை வழிநடத்துகிறார்.டாஸ் ... மேலும் பார்க்க