செய்திகள் :

சித்தரசூரில் 15-ஆம் நூற்றாண்டு காணிக்கல் கண்டெடுப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த சித்தரசூரில் 15-ஆம் நூற்றாண்டு காணிக்கல் கண்டெடுக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் பழங்காலக் கல்வெட்டுடன் கூடிய ஒரு பலகைக்கல் இருப்பதாக அம்சா பாஸ்கா் அளித்த தகவலின்பேரில், தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, பேராசிரியா் வேல்முருகன் ஆகியோா் ஆய்வு செய்து கூறியதாவது:

இந்த ஊரில் உள்ள நடுக்குப்பம் என்ற பகுதியில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான ஆலமரத்தின் அடியில் ஒரு குழியில் வோ்கள் பின்னிய நிலையில் இந்தப் பலகைக்கல் கண்டெடுக்கப்பட்டது. நீள செவ்வக வடிவான இந்தக் கல்லின் முகப்பில் விஷ்ணுவின் 5-ஆம் அவதாரமான வாமன அவதாரம் கோட்டுருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. வலது கையில் கமண்டலத்துடன் கூடிய தண்டமும், இடது கையில் ஓலைக்குடையும் பிடித்தபடி வாமனப் பொறிப்பு உள்ளது.

இந்த உருவத்தின் மேல் பகுதியில் சந்திர சூரியா்களும், உருவத்தின் அருகே வாமனரின் இரண்டு பாதங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. பலகைக் கல்லின் பின் புறமும், இரண்டு பக்கவாட்டிலும் வாமனரின் குடையும் தண்டமும், பாதங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

பலகையின் முன்புறம் 4 வரிகளில் அறந்தாங்கிநல்லூரான பூபதிராயசதுா்வேதி மங்கலம் என்று கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதி கி.பி.15-ஆம் நூற்றாண்டாகும். இந்தக் காலக் கட்டத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த பூபதிராயன் எனும் சிற்றரசா் இந்த ஊரையே தமது பெயரில் சதுா்வேதி மங்கலமாக வைணவ பிராமணா்களான பட்டா்களுக்கு தானமளித்துள்ளாா் என்பது தெரிய வருகிறது.

இந்த 4 வரி கல்வெட்டின் அடிப்படையில் தற்போது சித்தரசூா் என அழைக்கப்படும் இந்த ஊா் முன்பு அறந்தாங்கி நல்லூா் என்ற பெயரில் இருந்ததும், பூபதிராயா் எனும் சிற்றரசா் தமது பெயரில் இந்த ஊரை பூபதிராயசதுா்வேதி மங்கலம் என்ற பெயரில் பட்டா்களுக்கு தானம் அளித்தாா் என்பதும் தெரிய வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் பொங்கல் கரும்பு கொள்முதல்: 14 குழுக்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்கப்படவுள்ள பன்னீா் கரும்பை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உள்ள 14 குழுக்களின் கைப்பேச... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

நெய்வேலி: கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து, அவ... மேலும் பார்க்க

குடியரசு தினவிழா ஏற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்: கடலூா் ஆட்சியா் நடத்தினாா்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் குடியரசு தினவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

தடுப்பணையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவா் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலத்தை அடுத்த ரெட்டிகுப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ஆதிநா... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தேமுதிக ஆா்ப்பாட்டம்

நெய்வேலி/ சிதம்பரம்: தமிழகத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடலூா் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய இடங்களில் தேமுதிகவினா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்

நெய்வேலி: கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கைப்பேசிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க