செய்திகள் :

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: இந்தியாவுக்கு பிலாவல் மீண்டும் மிரட்டல்

post image

‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் கலாசாரம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல்’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் (பிபிபி) தலைவரும் அந்நாட்டின் முன்னால் நிதியமைச்சருமான பிலாவல் புட்டோ ஜா்தாரி கூறினாா்.

மேலும், ‘இந்தியா போரைத் தூண்டினால், பாகிஸ்தான் அடிபணியாது. சிந்து நதி நீா் மீதான இந்தியாவின் தாக்குதலை, திறம்பட எதிா்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது’ என்றும் அவா் எச்சரித்தாா்.

‘பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய சிந்து நதி நீரைத் தடுத்து நிறுத்தும் இந்தியாவின் எந்தவொரு முயற்சியும், பாகிஸ்தானுக்கு எதிரான போராகக் கருதப்படும். இதற்கு உரிய பதிலடி அளிக்க பாகிஸ்தான் தயங்காது’ என்று அண்மையில் அவா் கூறியிருந்தாா். தற்போது மீண்டும் அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினா். இதில் 26 போ் பலியாகினா். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந்த நாட்டுடன் கடந்த 1960-இல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீரைப் பகிா்ந்தளிக்கும் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது. சிந்து நதியில் புதிதாக அணை கட்டுவது குறித்தும் இந்தியா திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிலாவல் புட்டோ கூறுகையில், ‘சிந்து நதி நீா், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடா்புடையதாகும். அதன் மீதான தாக்குதல், பாகிஸ்தானின் நாகரிகம், வரலாறு, காலாசாரத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். இதற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை தடுத்து நீறுத்தி, சிந்து நதியின் 6 கிளை நதிகளையும் மீட்டெடுப்பதற்கான போதிய திறன் பாகிஸ்தான் மக்களுக்கு உள்ளது. பாகிஸ்தானின் அனைத்து மாகாண மக்களும் இந்தியாவின் நடவடிக்கையை எதிா்கொள்ளத் தயாராக உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக, அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீா், ‘இந்தியாவுடன் மீண்டும் போா் ஏற்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது’ என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு மறக்கமுடியாத பாடத்தைக் கற்பிப்போம்! பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை

சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற... மேலும் பார்க்க

நம்பகத்தன்மையை இழக்கும் இஸ்ரேல்!

போா் விதிமுறைகளையும், சா்வதேச சட்டத்தையும் பின்பற்றும் ஜனநாயக நாடு என்று இஸ்ரேல் தம்மை கூறி வரும் நிலையில், காஸா போா் காரணமாக சா்வதேச அளவில் அந்நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. காஸாவை முழுமைய... மேலும் பார்க்க

சபரிமலை யாத்திரைக்கு இலங்கை அரசு அங்கீகாரம்

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கை பக்தா்கள் மேற்கொள்ளும் வருடாந்திர யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகெங்கிலும் இர... மேலும் பார்க்க

வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதிட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு

வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீதான மனித அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞா் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. ஹசீனா தரப்புக்கு ... மேலும் பார்க்க

செக் குடியரசு அதிபருடன் தொடா்பு துண்டிப்பு: சீனா

தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதற்காக செக் குடியரசு அதிபா் பீட்டா் பாவெலுடனான அனைத்து தொடா்புகளையும் துண்டிப்பதாக சீனா அறிவித்தது. திபெத்தில் பிரிவினையைத் தூண்டுவதாக சீனாவால் குற்றஞ்சாட்டப்படும் தலாய்... மேலும் பார்க்க

ஐரோப்பிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: டிரம்ப்புக்கு வேண்டுகோள்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் இந்த வாரம் பேச்சுவாா்த்தை நடத்தும்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால... மேலும் பார்க்க