செய்திகள் :

கூலியில் ரஜினிக்கு ஜோடி யார்?

post image

கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

தமிழகத்தைத் தாண்டி கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் பகுதிகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட்கள் அபாரமாக விற்றுத் தீர்ந்துள்ளன. இதனால், கூலியின் முதல் நாள் வசூல் ரூ. 150 கோடிக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடி யாராக இருக்கும் என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் சத்யராஜின் மகளாக நடித்துள்ளதால் அவர் ரஜினிக்கு ஜோடியாக இருக்க வாய்ப்பில்லை.

டிரைலர் வசனத்திலும், ‘உங்களுக்கு யாரும் இல்லை. தனியாக வாழ்ந்து பழகிவிட்டீர்கள்’ என ரஜினி குறித்து கூறப்படுகிறது. இதனால், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியென யாருமில்லை எனக் கருதப்படுகிறது.

அதேநேரம், படத்தில் பிளாஷ்ஃபேக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அப்போது ரஜினிக்கு மனைவி இருந்திருக்கலாம் அது யாராக இருக்கும்? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. எல்லாக் கேள்விகளுக்கும் நாளை பதில் கிடைக்கும்!

இதையும் படிக்க: கூலி எப்படி இருக்கிறது? துணை முதல்வரின் ரிவ்யூ!

actor rajinikanth's pair in coolie movie

திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!

பெங்களூர் பக்தர் ஒருவர் ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தார். மற்றொரு பக்தர் வைரங்கள் மற்றும் வைஜயந்தி கற்கள் பதிக்கப்பட்ட தங்க லட்சுமி பதக்கத்தை ஏழுமலையானுக்கு நன... மேலும் பார்க்க

தலைவன் தலைவி நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு!

தலைவன் தலைவி திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்... மேலும் பார்க்க

பிரம்மசிரக் கண்டீஸ்வரர் கோயிலில் பந்தல்கால் முகூர்த்தம்: செப்.4ல் குடமுழுக்கு!

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் திருக்கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு திருகுடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம் திருவைய... மேலும் பார்க்க

கூலி திரைப்படமல்ல... ராம் கோபால் வர்மா பதிவு வைரல்!

இயக்குநர் ராம் கோபால் வர்மா கூலி திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீ... மேலும் பார்க்க

கூலி எப்படி இருக்கிறது? துணை முதல்வரின் ரிவ்யூ!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தை பார்த்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பி... மேலும் பார்க்க

ரஜினி - 50 ஆண்டுகள்! 50 திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 திரைப் படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். இந்த நீண்ட பயணத்தில் அவர் நடிப்பில் ரசிகர்களால் பாராட்டுகளையும் வணிக வெற்றிகளையும் பெற்ற ... மேலும் பார்க்க