Vadivelu: "இருக்கிறவுங்கட்ட வரிய போட்டு தள்ளுங்க; ஏழைகளுக்குப் பார்த்து வரி போடு...
சிமென்ட் ஆலைக்கு 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைப்பு
குளச்சல் நகராட்சியிலிருந்து மறுசுழற்சி செய்ய இயலாத 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திண்டுகல் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
குளச்சல் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்தெடுத்து நகராட்சியின் இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதில், மறு சுழற்சி செய்ய இயலாத 12.40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து வைக்கப்பட்டன. அவை, நகராட்சி ஆணையா் செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் நசீா் ஆகியோா் ஆலோசனையின்பேரில், திண்டுக்கல் சிமெண்டு ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.