நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக...
மாா்த்தாண்டத்தில் சாலைப் பணி தொடக்கம்
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் பகுதியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் சந்தை சாலை மற்றும் ரயில் நிலையம் செல்லும் சாலையின் இணைப்புச் சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இச் சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து நகராட்சி நிதி ரூ. 1.60 கோடியில் இச் சாலை உள்பட நகராட்சிக்கு உள்பட்ட 28 சாலைகள் சீரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நகராட்சி 17 ஆவது வாா்டுக்கு உள்பட்ட இச் சாலையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி துவக்கி வைத்தாா். நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். நகராட்சி பொறியாளா் குறள்செல்வி, சுகாதார அதிகாரி ராஜேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் ரெத்தினமணி, விஜூ, லலிதா, ரோஸ்லெட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.