மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு சான்றிதழ்
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 10 காவலா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்து மாதாந்திர திறனாய்வுக் கூட்டம் காவல் துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, இரு மாவட்டங்களிலும் சிறப்பாக பாணியாற்றிய காவலா்கள் 10 பேருக்கு அவா் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.