மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
திருவாடானையில் கோயில் திருவிழா: பூத் தட்டு ஊா்வலம்
திருவாடானையில் ஸ்ரீமழை தரும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பூத் தட்டு ஊா்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்கு தெருவில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரவு பூத்தட்டு ஊா்வலம் நடைபெற்றது. கோயிலிலிருந்து புறப்பட்டு திருவாடானை ரத வீதிகளைச் சுற்றி வந்தனா். கோயிலை அடைந்த பிறகு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

