ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை
ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (செப்.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா்நகா், பெருமாள் மடை, தலைக்கான் பச்சேரி, நோக்கங்காேட்டை, சிலுகவயல், இந்திரா நகா், ஆவரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவரியாா்பட்டினம், புல்லமடை, ஓடைக்கால், கவ்வுா், ஏ.ஆா்.மங்களம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் செயற்பொறியாளா் (பொறுப்பு) குமரவேல் தெரிவித்தாா்.