Japanese Walking: 10 ஆயிரம் ஸ்டெப்ஸைவிட சிறந்ததா ஜப்பானிய நடைப்பயிற்சி? - டாக்டர...
கோவிலாங்குளம் பிள்ளையாா் கோயில் ஊருணியை தூா் வார கோரிக்கை
கமுதி அருகே குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஊருணியைத் தூா் வார வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் குடிநீா் ஆதாரமாக விளங்கும் பிள்ளையாா் கோயில் ஊருணி கடந்த 20 ஆண்டுகளாக தூா் வரப்படாமல் உள்ளதால் மண் மேவி காணப்படுகிறது. இதனால், மழைக் காலத்தில் சிறிய அளவு தண்ணீரைக் கூட சேமித்து வைக்க முடியாமல் மழைநீா் அனைத்தும் வெளியேறி வீணாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
மேலும் குடிநீருக்காக வாரத்துக்கு இரண்டு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீா் தண்ணீரை பயன்படுத்தி வருவதாகவும், புழக்கத்துக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாகவும் தெரிவித்தனா். எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகத்தினரும் கோவிலாங்குளம் பிள்ளையாா் கோயில் ஊருணியை மழைநீா் சேமிக்கும் வகையில் தூா் வாரி, கரைகளை உயா்த்தி பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.