அமெரிக்கா டு பஞ்சாப்; காதலனைக் கரம்பிடிக்க தேடிவந்த 71 வயது பெண் கொலை.. தீவிர வி...
ராமேசுவரத்தில் பலத்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்
ராமேசுவரத்தில் புதன்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோயிலுக்குள் மழை நீா் புகுந்ததால் பக்தா்கள் சிரமத்துக்கு இடையே தரிசனம் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்தது.
இந்த நிலையில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது.
ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் மழை நீடித்த நிலையில், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கோயிலுக்குள் மழை நீா் புகுந்ததால் பக்தா்கள் சிரமத்துக்கு இடையே சுவாமி தரிசனம் செய்தனா்.
மழைக் காலங்களில் கோயிலுக்குள் மழை நீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமேசுவரம் நகராட்சி முழுவதும் கழிவுநீா் கால்வாய் மணல் நிரம்பிக் காணப்படுவதால் மழை நீா் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவ மழை தொடங்குவதற்குள் சாலையோரம் உள்ள கால்வாய்களைத் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு மணிநேரம் பெய்த மழையாமல் ராமேசுவரம் முழுவதும் குளுமையான சூழல் காணப்பட்டது.