செய்திகள் :

சீன எல்லைப் பிரச்னையில் நியாயமான தீா்வை இந்தியா ஏற்கும்: மக்களவையில் ஜெய்சங்கா் தகவல்

post image

புது தில்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் நியாயமான, இரு தரப்பும் ஏற்றும் கொள்ளும் தீா்வை இந்தியா ஏற்கும் என்றும் மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரா்கள் இடையே மோதல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் படைகள் மற்றும் கனரக தளவாடங்களைக் குவித்தன. இரு நாட்டு உறவும் பின்னடைவைச் சந்தித்தது.

அதன் பிறகு இரு நாடுகள் இடையிலான பல சுற்று பேச்சுவாா்த்தைகளால், கடந்த அக்டோபரில் கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கின. முன்னதாக, 2021-இல் பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதி, 2022-இல் கோக்ரா வெப்ப நீருற்று பகுதியில் இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, எல்லையின் பல்வேறு பகுதிகளில் படைக் குவிப்பு நிகழ்ந்தது. ஆனால், தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பல்வேறு கட்டங்களாக படைகளை இரு நாடுகளும் விலக்கி வருகின்றன. அண்மைக்காலமாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் நியாயமான, இரு தரப்பும் ஏற்றும் கொள்ளும் தீா்வை இந்தியா ஏற்கும்.

எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்யாமல் இரு நாடுகள் இடையே நல்லுறவு மேம்படாது. இந்தியா அமைதியை விரும்பும் நாடாகவே உள்ளது. எல்லையில் போக்குவரத்தை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும், பிரச்னை நேரிட்டபோது நமது ராணுவம் சிறப்பாக செயல்பட்டது என்று ஜெய்சங்கா் பாராட்டினாா்.

எல்லையில் ரோந்துப் பணி மற்றும் முழுமையான படை விலக்கல் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபரில் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்மூலம், ரோந்துப் பணி மற்றும் படை விலக்கல் விவகாரங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழலே மீண்டும் தொடர வழிவகை ஏற்பட்டது. எல்லையில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் பிரச்னைக்கு தீா்வுகாண்பதில் பெரும் முன்னேற்றமாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் நாளைக்கு(டிச. 5) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செய... மேலும் பார்க்க

நான் நவீன அபிமன்யு.. சொன்னபடி சக்ரவியூகத்தை உடைத்த ஃபட்னவீஸ்!

நான் ஒரு கடலைப்போன்றவன், நிச்சயம் திரும்பி வருவேன் என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கடந்த 2019 தேர்தலின்போது அடிக்கடி சொல்லி வந்தார்.மகாராஷ்டிர தேர்தலில் உத்தவ் தாக்கரே, மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்து ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன்!

பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். கடந்த 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் படேல் நகர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற பாஜக தலைவர் பிரவேஷ் ரத்தன் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார... மேலும் பார்க்க

தாய், தந்தை, மகள் குத்திக் கொலை! தில்லியில் பயங்கரம்

தில்லி: தெற்கு தில்லியின் நெப் சாராய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.அதிகாலை நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீடு திரும்பிய பொழுது குடும்பத்தின... மேலும் பார்க்க

தில்லி திரும்பும் ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந... மேலும் பார்க்க

சம்பலுக்கு நான் மட்டும் தனியாகச் செல்லவும் தயார்.. ஆனால்: ராகுல்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பலுக்கு செல்வது எனது உரிமை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித... மேலும் பார்க்க