ஐபிஎல் ரசிகர்களுக்காக... இன்றுடன் முடிகிறது ஜியோ வழங்கிய சலுகை!
சீனா-வங்கதேசம் இடையே 9 ஒப்பந்தங்கள்
சீனாவில் வங்கதேச அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஒன்பது ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இது குறித்து ஊடகங்கள் கூறியதாவது:
நான்கு நாள் சுற்றுப் பயணமாக சீனாவுக்கு புதன்கிழமை வந்த யூனுஸ், அந்த நாட்டின் ஹய்னன் மாகாணத்தில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய மாநாட்டில் பங்கேற்றாா். பின்னா் அவா் தலைநகா் பெய்ஜிங்குக்கு வியாழக்கிழமை வந்தாா்.
இந்த நிலையில், சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்துத்து அவா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அந்தப் பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பாரம்பரிய இலக்கியப் படைப்புகளின் வளா்ச்சி, மொழிபெயா்ப்பு, கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு, செய்திகள் பரிமாற்றம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஒன்பது ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன என்று ஊடகங்கள் தெரிவித்தன.