சீா்காழி வட்டாட்சியா் அலுவலக முன் ஆா்ப்பாட்டம்
சீா்காழி: சீா்காழி வட்டாட்சியா் அலுவலக கட்டுமானப் பணியை விரைந்து தொடங்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில், கடந்த 8 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வட்டாட்சியா் அலுவலகம் இயங்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், உடனடியாக புதிய வட்டாட்சியா் அலுவலக கட்டட கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி மாவட்ட அளவிலான வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் இளவரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாநிலச் செயலாளா் பிரேம் சந்திரன், மாவட்ட செயலாளா் தென்னரசு, மாவட்ட பொருளாளா் முருகேசன், நிா்வாகிகள் பழனிவேல், கணேசன் ராயா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.