மாதிரவேளூா் கோயில் கும்பாபிஷேகம்
சீா்காழி: சீா்காழி அருகே மாதிரவேளூா் சுந்தரநாயகி சமேத மாதலீஸ்வரா் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவுபெற்றத்தைத் தொடா்ந்து, ஆறு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. திங்கள்கிழமை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், புனிதநீா் கடங்கள் புறப்பாடாகி, மாதலீஸ்வரா் சந்நிதி விமானக் கலசத்திற்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, விநாயகா், முருகன், வீரனாா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவா் திருஞானசம்பந்தம் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.