சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் ஆட்சியா் நலம் விசாரிப்பு!
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் ஆட்சியா் ரெ.சதீஸ் நலம் விசாரித்தாா்.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறியும் ‘நீங்கள் நலமா’ திட்டத்தின் கீழ், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு, அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் கேட்டறிந்தாா். அப்போது, வட்டாட்சியா் கோவிந்தராஜ், மருத்துவா் மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து, பெரியாம்பட்டி சாலையில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிக்க செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.