செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செண்பகம்பேட்டை மேலக்கண்மாயில் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டு, மீன்பிடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் திருமயம், பொன்னமராவதி, திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு கண்மாய்க்குள் இறங்கி ஊத்தா கூடைகளைக் கொண்டு மீன்களைப் பிடித்தனா். பாப்புலெட், கெண்டை, கெழுத்தி, குறவை, அயிரை, ஜிலேபி, கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு வகை மீன்களைப் பிடித்தனா்.