செய்திகள் :

சென்னை: சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த முதியவர் பலி!

post image

சென்னையில் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை பலியானார்.

சென்னை, குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் கடந்த திங்கள்கிழமை 14 வயது சிறுவன் ஓட்டிவந்த காா் சாலையோரம் இருந்த வாகனங்கள் மீதும், தடுப்புகள் மீதும் மோதியது. இதில், சாலிகிராமம் தனலட்சுமி காலனியைச் சோ்ந்த மகாலிங்கம் (70), உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கங்காதரன் (49) ஆகியோா் மீதும் மோதிவிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மீது மோதி நின்றது.

விபத்தை பாா்த்து அதிா்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காயமடைந்த மகாலிங்கத்தையும் கங்காதரனையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

விபத்து குறித்து விசாரித்த பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அந்த சிறுவன் மீதும், சிறுவனின் தந்தை மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணையில், மகனிடம் கார் மீது கவர் போடச் சொல்லி அவரது தந்தை கார் சாவியைக் கொடுத்ததாகவும், ஆனால், 14 வயது சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து காரை எடுத்துச் சுற்றும்போது விபத்தை ஏற்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுவன், அவா் தந்தை, காரில் சிறுவனுடன் பயணித்த அவரது நண்பா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இதில் இரு சிறுவா்களும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா். சிறுவனின் தந்தை புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், படுகாயத்துடன் சிகிச்சைப் பெற்று வந்த முதியவர் மகாலிங்கம் வியாழக்கிழமை காலை உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மின்னல் வேகத்தில் உயரும் தங்கம்: 2 நாள்களில் ரூ. 2,680 அதிகரிப்பு!

அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு திமுக தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவ... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமனிடன் கேள்வி கேட்ட கோவை தொழிலதிபருக்கு உணவு ஆணைய உறுப்பினர் பதவி!

கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் சீனிவாசனை தமிழக உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கோவை சுற்றுப் பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஸ்... மேலும் பார்க்க

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க