பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
சென்னை சூப்பர் கிங்ஸில் மீண்டும் இணையும் ரெய்னா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2016, 2017 ஆண்டுகளை தவிர, 2021 வரை விளையாடியவர் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.
ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுத்ததில் ரெய்னாவின் பங்கு மறுக்க முடியாதது.
இதையும் படிக்க : வன்மம் தவிர்ப்போம்..! எம்.எஸ். தோனியின் அறிவுரை!
மூன்றாவது வீரராக களமிறங்கும் இடது கை பேட்டராக ரெய்னாவின் அதிரடி, சென்னைக்கு எதிராக விளையாடும் அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா ஒரு சதம், 39 அரைசதங்கள் உள்பட 5,528 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல், சின்ன தல என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச் (108) பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ள நிலையில், ரெய்னாவும் அணியுடன் இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.