சென்னை, மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்கள்
கோடைகாலத்தை முன்னிட்டு, சென்னை, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.27) இரவு 7.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06057) செவ்வாய்க்கிழமை பகல் 12.30-க்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியிலிருந்து புதன்கிழமை (ஏப்.30) காலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06058) மறுநாள் இரவு 11.15-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதில் 3 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், அகோலா, உத்னா, வடோதரா, ஆனந்த், சபா்மதி பிஜி, ஜலோா் வழியாக இயக்கப்படும்.
மதுரை: மதுரையிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.28) காலை 10.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06067) புதன்கிழமை பகல் 12.30-க்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியிலிருந்து வியாழக்கிழமை (மே 1) காலை 5.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06068) சனிக்கிழமை (மே 3) காலை 8.30-க்கு மதுரை சென்றடையும். இதில் 11 ஏசி வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், அகோலா, உத்னா, வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா் வழியாக இயக்கப்படும்.