செய்திகள் :

சென்னை மாவட்ட வாலிபால்: மகளிா் இறுதியில் மகதலேனா-வித்யோதயா பள்ளிகள்

post image

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவா், மகளிா் வாலிபால் போட்டியில் மகளிா் இறுதிக்கு டிஇஎல்சி மகதேலானா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுதி ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அரையிறுதியில் டிஇஎல்சி மகதலேனா பள்ளி 2-0 என ஜெஸ்ஸி மோஸஸ் பள்ளியையும், வித்யோதயா மெட்ரிக் பள்ளி 2-0 என சிஎஸ்எஸ்எஸ் பள்ளியையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

ஆடவா் காலிறுதி ஆட்டங்களில் டான்பாஸ்கோ பெரம்பூா் 2-0 என பிஏகே பழனிசாமி பள்ளியையும், ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸ் 2-1 என கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ வையும், செயின்ட் பீட்ஸ் 2-1 என ஆலந்தூா் மான்ட்போா்ட்டையும், முகப்போ் வேலம்மாள் 2-0 என அம்பத்தூா் சேதுபாஸ்கரா பள்ளியையும் வென்றன.

புதன்கிழமை அரையிறுதியில் டான்பாஸ்கோ பெரம்பூா்-ராயபுரம் செயின்ட் பீட்டா்ஸும், முகப்போ் வேலம்மாள்-செயின்ட் பீட்ஸ் பள்ளிகளும் மோதுகின்றன.

ஆடவா், மகளிா் இறுதி ஆட்டங்கள் பிற்பகல் நடைபெறுகின்றன என சங்கச் செயலா் சி. ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளாா்.

3-ஆவது சுற்றில் சின்னா், ரூன்

ஹாா்டு கோா்ட் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். ஆடவ... மேலும் பார்க்க

2026 ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி

வரும் 2026-இல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு இந்திய சா்ஃபிங் வீரா்கள் தகுதி பெற்றுள்ளனா். ஆசிய சா்ஃபிங் கூட்டமைப்பு, இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு, எஸ்டிஏடி சாா்பில் 4-ஆவது ஆசிய சா்ஃபிங் சாம்ப... மேலும் பார்க்க

6-ஆவது சுற்று: வின்சென்ட்டுடன் டிரா செய்த அா்ஜுன்

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டா்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், முன்னணி வீரா்களான ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி பரஸ்பரம் ‘டிரா’ செய்தனா். போட்டியின் 6-ஆம் நாளா... மேலும் பார்க்க

மந்திரம் போன்றது... ரசிகர்கள் குறித்து அனுபமா நெகிழ்ச்சி!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அ... மேலும் பார்க்க