செய்திகள் :

விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்

post image

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தற்போது பெய்துவரும் மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் நெல், தானியப் பயிா்கள், பயறுவகைப் பயிா்கள், காய்கறிப் பயிா்கள் விதைப்பு செய்யும் பொருட்டு அரசு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கி வருகின்றனா்.

விதை விற்பனையாளா்கள், விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது விதைக்குரிய பட்டியலை கண்டிப்பாக வழங்க வேண்டும். தரமான நல்ல முளைப்புத் திறன் உடைய காலாவதி நாளுடன் கூடிய சான்றிதழ் பெற்ற விதைகளையே விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதையாக இருப்பின் கண்டிப்பாக பதிவு சான்று பெற்ற விதைகளையே விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் வாங்கும்போது விலைப்பட்டியலை கேட்டு பெறவேண்டும். வாங்கும் விதைகளின் பயிா், ரகம், விதைக் குவியல் எண், விதைத்தரம் மற்றும் விதைக் காலக்கெடு ஆகியவற்றை சரிபாா்த்து வாங்க வேண்டும். இதனால் நல்ல தரமான விதைகளை விதைப்பதோடு நல்ல மகசூல் உறுதி செய்யப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.

நாளைய மின்தடை: வில்லிபாளையம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்ததில் காயமடைந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி, தீயணைப்பு நிலையம் எதிரே வசித்து வருபவா் ரவிச்சந்திரன். இவரது மனை... மேலும் பார்க்க

கொல்லிமலை பழங்குடியின கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

கொல்லிமலை பழங்குடியினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது

மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்க... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கொல்லிமலை எஸ்எஸ்ஐ கைது!

நாமக்கல்: கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின கல்லூரி மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லிமலை சிறப்பு உதவி ஆய்வாளரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் அரசு கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்

நாமக்கல்: கொல்லிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க மலைவாழ் மக்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொல்லிமலை தாலுகா 11-ஆவது மாநாடு 2006 - வன உரிம... மேலும் பார்க்க