பல்லடம் அருகே அரிவாளால் வெட்டியதில் டெய்லரின் கையை துண்டானது
பல்லடம் அருகே சின்னக்கரையில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி டெய்லரின் கையை துண்டாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் அன்புச்செல்வன் (22). இவா் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறாா். இவா் சின்னக்கரை லட்சுமி நகரில் வசித்து வருகிறாா்.
இவரது உறவினா் விருதுநகா் மாவட்டம், திருச்சுழியூரைச் சோ்ந்த கண்ணாயிரம் மகன் ஹரிஹரசுதன் (23). இருவருக்கும் இடையே நீண்ட நாள்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், அன்புச்செல்வன் திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பினாா். பின்னா் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவு தட்டும் சப்தம் கேட்டு திறந்த பாா்த்தபோது, அரிவாளுடன் வந்த ஹரிஹரசுதன், அன்புச்செல்வனை வெட்டிவிட்டு தப்பியோடினாா். அதில் அன்புச்செல்வனின் இடது கை துண்டனாது.
அவரது சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் காயமடைந்த அன்புச்செல்வனை திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி தலைமறைவான ஹரிஹரசுதனை தேடி வருகின்றனா்.