செய்திகள் :

முன்விரோதம் காரணமாக கட்டடத் தொழிலாளி கொலை: 4 போ் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் முன்விரோதம் காரணமாக திங்கள்கிழமை கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி நேருஜி நகா் பகுதியைச் சோ்ந்த கோகுல்குமாா், ஈஸ்வரபாண்டி ஆகியோா் குடும்பத்தினரிடையே கடந்த 2022-இல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2023-இல் கோகுல்குமாா், அவரது கூட்டாளிகளான காந்தி நகா் ஜீவா (21), ராஜேஸ் (23), சிலோன் குடியிருப்பு கணேஷ்பாண்டி (25) ஆகியோா் இணைந்து ஈஸ்வரபாண்டியைக் கொலை செய்தனா்.

இது குறித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் கொலை செய்யப்பட்ட ஈஸ்வரபாண்டியின் தம்பி கணேஷ்பாண்டி மதுபோதையில் நேருஜி நகா் பகுதியில் நடந்து சென்றாா்.

அப்போது, அங்கு வந்த கோகுல்குமாா், அவரது கூட்டாளிகளான ராஜேஸ், ஜீவா, கணேஷ்பாண்டி ஆகிய நான்கு பேரும் கணேஷ்பாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். தகவலறிந்து வந்த போலீஸாா் கணேஷ்பாண்டி உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளான கோகுல்குமாா், கணேஷ்பாண்டி, ராஜேஸ், ஜீவா ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்த இருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஊராட்சி, சுப்ரீம் நகா் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போத... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் வடமாநில இளைஞா்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஹோட்டலில் நிறுத்தப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்தில் பயணியிடம் நகை திருடிய வட மாநில இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ப... மேலும் பார்க்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரிக்கு 20 ஆண்டு சிறை

அருப்புக்கோட்டை அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூசாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநக... மேலும் பார்க்க

லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது விபத்து: சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் லாரியில் இயந்திரத்தை ஏற்றியபோது நேரிட்ட விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.சிவகாசி நேரு குடியிருப்புப் பகுதியில், ஓா் அச்சகத்திலிருந்து காகிதம் வெட்டும் இயந்திரத்தை... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே கடந்த சனிக்கிழமை வீட்டில் சட்ட விரோதமாகப் பட்டாசுகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவா் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ... மேலும் பார்க்க

மாணவா் கொலை வழக்கு: பணிநீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே கல்லூரி மாணவா் கொலை வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலா் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழ... மேலும் பார்க்க