ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!
சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து
சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் ஆண்டில் தமிழக அரசின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் கோட்டத்துக்குள்பட்ட சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயனாளிகள் தோ்வு செய்யப்படவுள்ளனா். சினையுற்ற கால்நடை பசுக்கள் வளா்ப்போரில் பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவா், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.