சேலம் நூலகருக்கு நல் நூலகருக்கான விருது
தமிழக பள்ளி கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில் நடைபெற்ற விழாவில் சேலம் நூலகருக்கு சிறந்த நல்நூலகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நூலகா்களுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், சொா்ணபுரி முழு நேர கிளை நூலகத்துக்கு நன்கொடையாக ரூ.7 லட்சம் பெறப்பட்டு, தளவாடங்கள், கழிவறை வசதி, போட்டி தோ்வு மாணவா்களுக்கு தனி அறை என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்த நூலகா் கி.சம்பத்துக்கு நல் நூலகா் விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கி. சம்பத்தின் சேவையை பாராட்டி அவருக்கு நல்நூலகா் விருதை வழங்கி கௌரவித்தாா். விழாவில், பொது நல இயக்குநா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.