சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
சேலம் மாவட்டத்தில் 62.6 மி.மீ மழை பதிவு
சேலம் மாநகா், புறநகா்ப் பகுதிகளில் பரவலாக புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சேலத்தில் 62.6 மி.மீ மழை பதிவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில், புதன்கிழமை இரவு மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஓமலூா், மேட்டூா், சங்ககிரி, எடப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
மழை அளவு (மி.மீட்டரில்): அதிகபட்சமாக சேலத்தில் 62.6 மி.மீ. மழை பதிவானது. டேனிஷ்பேட்டை- 60 மி.மீ, ஏற்காடு- 29.4 மி.மீ. ஆனைமடுவு- 1 மி.மீ, கரியகோவில்- 8 மி.மீ., ஆத்தூா்- 3 மி.மீ. மேட்டூா்- 51.4 மி.மீ. சங்ககிரி- 5.2 மி.மீ., எடப்பாடி- 18 மி.மீ. ஓமலூா்- 12.5 மி.மீ. மழை பதிவானது.