சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
ஜப்பானில் வெளியான மாவீரன் திரைப்படம்! எஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியிருக்கிறது.
மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் கடந்த 2023-இல் வெளியானது.
விமர்சன ரீதியாகவும் கமர்ஷியலாகவும் மாபெறும் வெற்றிப் பெற்ற படமாக மாவீரன் மாறியது.
இந்தப் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பார். மிஷ்கின் வில்லனாக அசத்தியிருப்பார்.
ஷாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்தப்படம் தற்போது ஜப்பானில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஷாந்தி டாக்கீஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்றிரவு, “மாவீரன் நாளை முதல் ஜப்பான் மக்களின் மனதை வெல்ல தயாரானான்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இன்றுமுதல் ஜப்பானில் மாவீரன் திரைப்படம் வெளியாகியிருக்கிறது.