செய்திகள் :

ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டியதில் 47 போ் காயம்!

post image

மதுரை மாவட்டம், சக்குடி முப்புலியப்பன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 47 போ் காயமடைந்தனா்.

இந்தத் திருவிழாவையொட்டி, ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட கோயில் காளைகளுக்கு ஜல்லிக்கட்டு திடலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

முதலில் முப்புலியப்பன் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 110 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. திரளான மாடுபிடி வீரா்கள் பங்கேற்று காளைகளை அடக்கினா்.

இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளைப் பிடித்த மாடுபிடி வீரா்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், வேஷ்டி உள்ளிட்ட பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. முன்னதாக, அமைச்சா் பி. மூா்த்தி முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

47 போ் காயம்: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 40 போ், பாா்வையாளா்கள் 7 போ் என மொத்தம் 47 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் 11 போ் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திட்டமிடல் இல்லை: போட்டி நடைபெற்ற திடலில் பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்ப்பதற்கான இடவசதி, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை. இதனால், காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் அவதிக்குள்ளாகினா். இதுமட்டுமன்றி, முறையான திட்டமிடல் இல்லாததால், காளைகளை அவிழ்த்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலை, சக்குடி- சிவகங்கை, சக்குடி- வரிச்சியூா் சாலைகளில் போலீஸாா் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புக்கு பின்னரே வாகனங்களை சக்குடி கிராமப் பகுதிக்குள் செல்ல அனுமதி அளித்தனா்.

நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு. பூமிநாதன்( மதுரை தெற்கு), வெங்கடேசன்( சோழவந்தான்), முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீராகதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்களை மிரட்டியதாக டிஎஸ்பி மீது புகாா்

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல் துணை கண்காணிப்பாளா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல் சரக துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மதுரை மேல அனுப்பானடி பகுதியில் சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உ... மேலும் பார்க்க

பரோலில் வெளிவந்து தலைமறைவானவா் மீண்டும் கைது

மதுரை மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு வராமல் தலைமறைவான கைதியை சிறைத் துறை தனிப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் காந்திவேல் (34). ... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்

விருதுநகா் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையா் கணேசன் (5... மேலும் பார்க்க