பாஜக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு: "குற்றம் செய்ததாகவே தெரிகிறது" - ஜாமீன் மறுப்...
பரோலில் வெளிவந்து தலைமறைவானவா் மீண்டும் கைது
மதுரை மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு வராமல் தலைமறைவான கைதியை சிறைத் துறை தனிப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் காந்திவேல் (34). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதைத்தொடா்ந்து, காந்திவேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிறையில் நன்னடத்தை காரணமாக ஒரு வாரம் பரோலில் சொந்த ஊருக்குச் சென்றாா். பரோல் முடிந்து சனிக்கிழமை காந்திவேல் சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இதில் மதுரை காமராஜா்புரம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் காந்திவேல் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப் படையினா் அங்கு சென்று அவரைப் பிடித்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பாக கரிமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.