Tamil Cinema Business: படத்தின் திரையரங்க ரிலீஸுக்கு முன்பே எப்படி லாபம் கிடைக்க...
ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: அமைச்சர்
ஜார்க்கண்டில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநில சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதீப் யாதவ் எழுப்பிய கேள்விக்கு வருவாய் மற்றும் நில சீர்திருத்தத் துறை அமைச்சர் தீபக் பிருவா பதிலளித்தார்.
அடுத்த நிதியாண்டில் சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்களால் முடிந்த அனைத்தை முயற்சிகளையும் செய்வோம். பணியாளர் துறை ஏற்கனவே இந்தப் பணியை மேற்கொள்ள ஒரு நோடல் நிறுவனத்தை நியமிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்தாண்டு பிப்ரவரியில் ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்காக, மார்ச் 4ஆம் தேதி துறை ஒரு நிறுவனத்தை பணியமர்த்த ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.
இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.