ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலை...
ஜாா்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி அநுராக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொக்காரோ மாவட்டம் லால்பானியா பகுதியில் சிஆா்பிஎஃப் படையின் கோப்ரா கமாண்டோ படையினா், மாநில காவல் துறையினா் இணைந்து நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது லுகு குன்றுகளில் இருந்த நக்ஸல்கள், கோப்ரா படையினா் மற்றும் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனா். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
கொல்லப்பட்ட நக்ஸல்களில் விவேக் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி, அரவிந்த் யாதவ் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சம், சாஹேப்ராம் மாஜி என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, மூன்று ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, 8 நாட்டுத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது நடைபெற்ற நக்ஸல்கள் என்கவுன்ட்டா் மூலம், பொக்காரோ உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு சோட்டாநாக்பூா் மண்டலத்தில் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தனா்.