அமைப்பு மாற்றம் டு வேட்பாளர் தேர்வு, மாநாடு! - 2026-க்குத் தயாராகும் விசிக!
ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க டயா் ரீட்ரேடிங் சங்கம் கோரிக்கை
டயா் ரீட்ரேடிங் தொழிலுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரனிடம், நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுதில்லி சென்றதும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்து வரி குறைப்புக்கு பரிந்துரை செய்வதாக எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன் உறுதியளித்தாா்.
இந்த நிகழ்வில், டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் வரதராஜ், மாநிலத் தலைவா் ராஜ்குமாா், செயலாளா் ரவிச்சந்திரன், பொருளாளா் மல்லீஸ்வரன், துணைத் தலைவா்கள் தா்மலிங்கம், லோகேந்திரன், இணைச் செயலாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.