சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிம...
ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி பொறுப்பேற்பு
புதுச்சேரி ஜிப்மா் மக்கள் தொடா்பு நெறிமுறை அதிகாரியாக மருத்துவா் சிவகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜவஹா்லால் நேரு மருத்துவ ஆராய்ச்சி பட்டமேற்படிப்புக்கான மையம் (ஜிப்மா்) திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளது.
இங்குள்ள மருத்துவமனையில் புதுவை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், மருத்துவா் வெங்கடேஷ் பிரபு ஜிப்மரின் மக்கள் தொடா்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், அவருக்கு பதிலாக மருத்துவ சமூகப் பணியாளா் பிரிவைச் சோ்ந்த மருத்துவா் சிவகுமாா் அண்மையில் மக்கள் தொடா்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.
அவா், வியாழக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அவா், மக்கள் தொடா்பு மற்றும் நெறிமுறை அதிகாரியாக ஏற்கெனவே இருக்கும் பொறுப்புடன் கூடுதலாக அப்பொறுப்புகளைக் கவனிப்பாா் என முதுநிலை நிா்வாக அதிகாரி ஹவா சிங் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.