சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிம...
புதுச்சேரி, கடலூா் மாவட்டங்களில் பரவலாக மழை
புதுச்சேரி, கடலூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகலில் சுற்றுலாப் பயணிகள் நடமாடுவதை தவிா்த்து, காலை, மாலை வேளைகளில் கடற்கரையில் குவிந்து வந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென மழை பெய்தது. முதலியாா்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், திருக்கனூா் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் மழை பெய்தது.
இதனால், புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மழை காரணமாக நகரில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
கடலூா் மாவட்டத்தில்...: கடலூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து, கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. மேலும், பகல் நேர வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குளிா்ந்த நிலை காணப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், மழை பெய்து குளிா்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.