செய்திகள் :

ஜூன் வரை ஆதாா் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு

post image

ஆதாா் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆதாா் அட்டையில் பொதுமக்கள் தங்களின் பெயா், முகவரி மற்றும் பிற அடிப்படை தகவல்களை அதிகாரபூா்வ ‘மைஆதாா்’ இணையதளம் மூலம் கட்டணமின்றி புதுப்பித்துக் கொள்ளும் வசதி கடந்த டிசம்பா் 14-ஆம் தேதிவரை நடைமுறையில் இருந்தது. இந்த வசதியை வரும் ஜூன் 14-ஆம் தேதிவரை நீட்டித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்மூலம், பொதுமக்கள் ஆதாா் அட்டையில் தங்களின் சரியான தகவல்களை கட்டணமின்றி புதுப்பிப்பதற்கு போதிய அவகாசம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14-ஆம் தேதிவரை மைஆதாா் இணையதளம் மூலம் ஆதாா் அட்டையைக் கட்டணமின்றி புதுப்பித்துக்கொள்ளலாம். அதேநேரம், ஆதாா் மையங்களில் புதுப்பிப்புகளுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். ஜூன் 14-ஆம் தேதிக்குப் பிறகு, மைஆதாா் இணையதளத்திலும் புதுப்பிப்புகளுக்கு ரூ.25 கட்டணம் பொருந்தும்.

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் விலகல்

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் விலகிக்கொண்டாா். கடந்த 1993 முதல் 2011-ஆம் ஆண்டு வரை, மத்திய அரசு 214 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செ... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தலால் பெண் மென்பொருள் பொறியாளர் தற்கொலை!

பெங்களூருவில் பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது உறவினரின் பாலியல் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக இருந்த பெண்ணும், அவரது உறவினரான பிரவீன் சிங் என்பவரும் 6 ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் ... மேலும் பார்க்க

நீட் தேர்வு தொடர்பாக வெளியான முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு ஒஎம்ஆர் முறையிலேயே நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு... மேலும் பார்க்க

தில்லி: தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் காங்கிரஸ்!

தில்லி பேரவைத் தேர்தலில் புதிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால், மாதந்தோறும் ரூ. 2,500 மகளிர் உரிமைத் தொகை, ரூ. 25 லட்சம்வரையில் இலவச சுகாதா... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல்: பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடி... மேலும் பார்க்க