டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவு!
மும்பை: இன்றை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 85.68 ஆக நிலைபெற்றது.
பரஸ்பர கட்டணங்கள் மீதான 90 நாள் இடைநிறுத்தத்திற்கு மத்தியில் நேர்மறையான உள்நாட்டு மேக்ரோ பொருளாதார தரவுகளால் ரூபாய் வலுப்பெற்றதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.66 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.50 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.72 ஐ தொட்ட நிலையில், முடிவில் 12 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் உயர்ந்து ரூ.85.80-ஆக இருந்தது. இது முந்தைய அமர்வில் அதாவது வெள்ளிக்கிழமை அன்று 58 காசுகள் உயர்ந்தது ரூ.86.10 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!