செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.77 ஆக நிறைவு!
மும்பை: உள்ளூர் பங்குச் சந்தைகள் பலவீனமாகவும், வர்த்தக கட்டண நிச்சயமற்ற தன்மையுடனும் இருந்ததால், இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.77 ஆக நிறைவடைந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதான பொருட்களுக்கு 35 சதவிகித வரிகளை விதித்ததால், உலகளாவிய சந்தை உணர்வுகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.76 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், குறைந்தபட்சமாக ரூ.85.91 ஐ தொட்ட நிலையில், முடிவில் 7 காசுகள் சரிந்து ரூ.85.77-ஆக முடிந்தது.
நேற்று (வியாழக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.70 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: ஐடி, ஆட்டோ பங்குகளின் சரிவை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!