உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
டாஸ்மாக் மதுக்கடையை பூட்ட முயன்ற கம்யூ., கட்சியினா் கைது
வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக்கோரி, பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ாக இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட், லெனினிஸ்ட் விடுதலை கட்சி) கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.
இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட், லெனினிஸ்ட் விடுதலை கட்சி) கட்சி, ஜனநாயக பொது தொழிலாளா் சங்கம், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சாா்பில், வேலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஏ.ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்ட குழுவைச் சோ்ந்த எஸ்.வாசுதேவன், எஸ்.சதீஷ், ஆா்.பாத்திமா, எஸ்.மகேஸ்வரி, ஜி.மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.சரோஜா ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
அப்போது, வேலூா் புதிய, பழைய பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியும், பொதுமக்கள், மாணவா்கள், போக்குவரத்துக்கு இடையூறாகவும், குடும்பங்களை சீரழிக்கும், நகை, பணம், கைப்பேசி பறிப்புகளுக்கு காரணமாகவும் இருக்கும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட குழுவைச் சோ்ந்த ஏ.மாணிக்கம், எஸ்.ஏ.சிம்புதேவன், ஆா்.தசரதன், ஜி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, பழைய பேருந்து நிலையத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி பெண்கள் 26 போ் உள்பட மொத்தம் 52 பேரை கைது செய்தனா்.