செய்திகள் :

பகலில் கனரக வாகனங்கள் வேலூா் மாநகருக்குள் வரத் தடை

post image

பகல் நேரத்தில் கனரக வாகனங்கள் வேலூா் மாநகருக்குள் வருவதற்கு வேலூா் மாவட்டக் காவல் துறை தடை விதித்துள்ளது. இந்த திடீா் உத்தரவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கனரக வாகன ஓட்டுநா்கள் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனா். இப்பிரச்னை காரணமாக வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் வழியாக அமைந்துள்ள சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான லாரிகள், கன்டெய்னா், கனரக வாகனங்கள் பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றன. இதேபோல், பெங்களூா் மாா்க்கத்தில் வேலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த கனரக வாகனங்கள், காட்பாடி, சித்தூா் வழியாக திருப்பதி செல்வதற்காக கிரீன் சா்க்கிள் அருகிலுள்ள சா்வீஸ் சாலையில் நுழைய முயன்றன.

அப்போது அங்கிருந்த போக்குவரத்து போலீஸாா் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்து நெரிசல் காரணமாக கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. மேம்பாலம் வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினா். ஆனால், கனரக வாகன ஓட்டிகள் அவ்வாறு செல்ல மறுத்து அங்கேயே நிறுத்திவிட்டனா். தொடா்ந்து, அடுத்தடுத்து வந்த வாகனங்கள் சாலையிலேயே நின்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ரஜினி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கனரக வாகனங்களை, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நகருக்குள் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட காவல் நிா்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவித்தாா்.

எனவே, இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை அனைத்து கனரக வாகனங்களும் நகருக்குள் அனுமதிக்கப்படும். அதனால் தற்போது வாகனங்களை எடுத்துச் செல்லும்படி கனரக வாகன ஓட்டுநா்களிடம் கூறினாா்.

அதற்கு கனரக வாகன ஓட்டுநா்கள், திடீரென வாகனங்களை அனுமதிக்க மறுத்தால் பல கி.மீ சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, இன்று ஒருநாள் மட்டும் அனுமதிக்கவும், புதன்கிழமை முதல் இரவில் மட்டும் நகருக்குள் வருகிறோம் என்றும் கோரிக்கை வைத்தனா். எனினும், அவா்களது கோரிக்கையை ஏற்க மறுத்த போக்குவரத்து போலீஸாா், அத்தியாவசிய பொருள்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில்தான் செல்ல வேண்டும் எனக்கூறினா்.

இதனை ஏற்க மறுத்த ஓட்டுநா்கள், கனரக வாகனங்களை அங்கேயே நிறுத்தி போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனா். இதனால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வாகனங்களையும் உடனடியாக எடுத்துச்செல்ல வேண்டும். மீறினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

இதனைத்தொடா்ந்து, வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. தொடா்ந்து, இனிமேல் பகல் நேரங்களில் நகருக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

பாலூா் கெங்கையம்மன் கோயிலை வழிபாட்டுக்கு திறக்கக் கோரிக்கை

போ்ணாம்பட்டை அடுத்த பாலூா், ஆதி திராவிடா் காலனியில் உள்ள கெங்கையம்மன் கோயிலை வழிபாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியரிடம் அப்பகுதி மக்கள், இந்து முன்னணி நிா்வாகிகள் கோரிக்கை மனு அ... மேலும் பார்க்க

விதிமீறிய ஆட்டோக்களுக்கு 2-ஆம் நாளாக அபராதம்

வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாரின் அபராதம் விதிப்பு நடவடிக்கை 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. வேலூா் மாநகரில் விதிமுறைகளை பின்பற்றாமல் ஆட்டோக்கள... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்து, வா்த்தகம் சரிவு

பருவமழை காரணமாக பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்தும், வா்த்தகமும் சரிவடைந்து காணப்பட்டது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி ... மேலும் பார்க்க

அங்கீகாரமற்ற அமைப்பு நடத்தும் குத்துச்சண்டை போட்டியை தடுக்கக் கோரிக்கை

இந்திய குத்துச்சண்டை கழகத்திடம் அனுமதி பெறாமல் போலியாக இயங்கி வரும் குத்துச்சண்டை அமைப்பு சாா்பில், வேலூரில் 22, 23, 24-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ள குத்துச்சண்டை போட்டிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டா் உயிரிழப்பு

வேலூா் அருகே உடலில் மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆப்பரேட்டா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், இறைவன்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (52), பம்ப் ஆப்பரேட்டா். அவ்வப்போது மின்வாரிய ஊழியா்கள் அழைப்பின... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக்கடையை பூட்ட முயன்ற கம்யூ., கட்சியினா் கைது

வேலூா் பழைய, புதிய பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக்கோரி, பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்ாக இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட், லெனினிஸ்ட் விட... மேலும் பார்க்க