உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
விதிமீறிய ஆட்டோக்களுக்கு 2-ஆம் நாளாக அபராதம்
வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸாரின் அபராதம் விதிப்பு நடவடிக்கை 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.
வேலூா் மாநகரில் விதிமுறைகளை பின்பற்றாமல் ஆட்டோக்கள் இயக்கப்படுவது அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வேலூா் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் ரஜினி தலைமையில் போக்குவரத்து போலீஸாா் பழைய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநா்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாத ஓட்டுநா்கள், வாகன உரிமம் புதுப்பிக்கப்படாத ஆட்டோக்கள், பயணிகள் ஆட்டோவில் சரக்கு ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் உள்ளிட்ட வகையில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 20 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 200 ஆட்டோக்களுக்கு ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதன்தொடா்ச்சியாக, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை புதிய பேருந்து நிலைய பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ரஜினி தலைமையில், போக்குவரத்து போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிகளை மீறியதாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.