டிகிரி படித்த இளைஞரா நீங்கள்? கனரா வங்கியில் பயிற்சி வேலை! - எப்படி விண்ணப்பிக்கலாம்?
கனரா வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அப்ரண்டீஸ் பயிற்சி பணி. இது 12 மாதங்களுக்கான பயிற்சிப் பணி ஆகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 3,500; தமிழ்நாட்டில் 394, புதுச்சேரியில் 4
வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
உதவித்தொகை: ரூ.15,000
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

குறிப்பு: கண்டிப்பாக அந்தந்தப் பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சிப் பணி பெற பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பு மதிப்பெண் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, அதில் பிராந்திய மொழி படித்திருக்காவிட்டால், பிராந்திய மொழித் தேர்வு தனியாக எழுத வேண்டும்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
திறன் தேர்வு, ஷார்ட்லிஸ்ட்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்கக் கடைசி தேதி: அக்டோபர் 12, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!